உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

மோகனூர்: மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில், விசேஷ நாட்கள், பண்டிகை காலங்களில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபடுவர். உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை, கோவில் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதன்படி, 2018, ஏப்., மாதம் கடைசியாக, உண்டியல் எண்ணப்பட்டது. இந்நிலையில், நேற்று, உதவி ஆணையர் தமிழரசு, தக்கார் பழனிவேல், ஆய்வாளர் கவுசல்யா ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. முடிவில், இரண்டு லட்சத்து, 7,448 ரூபாய் ரொக்கம், 35 கிராம் தங்க நகை, 16 கிராம் வெள்ளியும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !