விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2155 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆடி வெள்ளி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று ஆடி வெள்ளி என்பதால், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் இல்லாமல், நடந்த வழிபாட்டில், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.