உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கடைசி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம்: ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

துடியலூர் மீனாட்சி கார்டனில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், பெரிய நாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !