ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
ADDED :1888 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆவணி மாத பூஜைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை ஆக., 16 மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் நடை மலையாள மாதம் சிங்கம் பிறப்பை முன்னிட்டு ஆக.,16 மாலை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தலைமை பூசாரி ஏ.கே.சுதீர் நம்பூதிரி, தந்திரி கண்டாரரு ராஜீவாரு முன்னிலையில் நடை கதவுகளை திறந்தார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆக., 17 அன்று மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் பிறக்கிறது. அதை முன்னிட்டு இம்மாதம் 21 வரை கோவிலில் பூஜைகள் நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படாது. அன்றாடம் நடத்தப்பட வேண்டிய பூஜைகள் மட்டும் ஆக., 21 வரை நடத்தப்படும். மேலும் ஆக., 29 ஓணம் அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் இவ்வாறு கோவில் தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.