உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரிக்கு தயாராகும் கொலு பொம்மைகள்

நவராத்திரிக்கு தயாராகும் கொலு பொம்மைகள்

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தவாறு சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்கள் சிலைகள், 3 இஞ்ச் முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள் ஆகியன களிமண், காகிதகூழ், சிமென்ட் ஆகியவற்றால் தயாரிக்கின்றனர். நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் ராமலிங்கம், ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: இந்தாண்டு நவ நரசிம்மர், யோக நரசிம்மர், நவசக்தி, அஷ்ட பைரவர்,ராமர், கிருஷ்ணர், பதஞ்சலி முனிவர் சிலைகள் தயாரித்துள்ளோம். களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் சிலைகள் தயாரிக்கிறோம். கொரோனாவால் 5 மாதங்கள் தொழில் முடங்கியது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !