விநாயகர் சிலைகள் ஏற்ற சரக்கு வேன்களுக்கு தடை
ADDED :1981 days ago
வடமதுரை: சதுர்த்தி விழாவிற்காக சரக்கு வேன்களில் விநாயகர் சிலைகளை ஏற்ற வேண்டாம் என, வாகன உரிமையாளர்களுக்கு வடமதுரை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக, சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க, ஊர்வலம் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஹிந்து அமைப்புகள் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்க, சமூக இடைவெளியை பின்பற்றி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக காப்பு கட்டி விரதங்களை துவங்கியுள்ளனர். பல இடங்களில் ரகசியமாக விநாயகர் சிலைகளையும் வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில் வடமதுரை போலீசார் சரக்கு வாகன உரிமையாளர்களை அழைத்து, எக்காரணமும் கொண்டும் வாகனங்களில் விநாயகர் சிலை ஏற்றி வரக்கூடாது என எச்சரித்துள்ளனர்.