உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில் 39வது பிரதிஷ்டா தினம்

சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில் 39வது பிரதிஷ்டா தினம்

திருப்பூர்: சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள், ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அனுக்கிரஹத்துடன், திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், ஸ்ரீசாரதாம்பாள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.


கோவிலின், 39வது ஆண்டு பிரதிஷ்டா தின அபிேஷக உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. காலை, 8:30 மணிக்கு, ஸ்ரீசாரதாம்பாள் மகா அபிேஷகமும், மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனையும் நடந்தது. வரும், 24ம் தேதி ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகளின், 76வது வர்தந்தி விழாவை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு நவக்ரஹ ஆயுஷ்ய ேஹாமம், காலை, 9:00 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெறுகிறது. வரும் ஏப்., 21ம் தேதி காலை, ஸ்ரீசங்கர ஜெயந்தி உற்சவம் நடைபெற உள்ளது. காலை, 8:00 மணிக்கு வேதபாராயணம், 10:00 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற உள்ளது. இவ்விழாக்களில், பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெறலாம் என ஸ்ரீசிருங்கேரி சங்கரமட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !