உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இந்து அறநிலைய துறை அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இந்து அறநிலைய துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, கோவில்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து அறநிலைய துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து அத்துறையின் இயக்குனர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, கோயில் சார்பாக எந்தவித சிலைகளையும் பொது இடங்களில் வைக்கக் கூடாது. மக்கள் ஒன்றுகூடும் வகையில் ஊர்வலங்கள் போன்றவற்றை கோவில் சார்பாக நடத்தக் கூடாது. கோவில் வளாகத்தில் புதிய சிலையை நிறுவக் கூடாது. மதம் சம்பந்தப்பட்ட பிரார்த்தனை கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தடை செய்யப்படுகிறது. கோவில் எதிரில் விநாயகர் சிலைக்காக கொட்டகை, ஷாமியானா பந்தல் அமைக்க கூடாது.கொரானா வைரஸ் பரவும் ஆபத்துள்ளதால் கோவில்களில் பிரசாத வினியோகம் தடை செய்யப்படுகிறது. சதுர்த்தி விழாவையொட்டி, கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. விநாயகர் சதுர்த்தி சிறப்பு நித்தியப்படி பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் பக்தர்கள் இன்றி நடைபெற வேண்டும். சதுர்த்தியின் போது ஒன்றுக்கு மேற்பட்ட குருக்கள், சிறப்பு பூஜைகள் போன்றவற்றை சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தலாம். அதிலும் பக்தர்களை அனுமதிக்க கூடாது.உபயதாரர், நன்கொடையாளரிடம் கட்டணம் பெற்று அவர் பெயரில் பூஜை, அர்ச்சனை செய்தால், அப்போது உபயதாரர்கள் ஐந்து பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். முடிந்தால், முக்கியமான மூலவர் சன்னதிகளை தவிர்த்து ஏனைய விநாயகர் சதுர்த்தி பூஜை மற்றும் அர்ச்சனைகளை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாம்.,இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !