சின்மயா மிஷனில் கணபதி பூஜை
ADDED :1874 days ago
மதுரை, மதுரை சின்மயா மிஷனில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (ஆக.22) காலை 10:35 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது. காலை 10:35 மணிக்கு கணபதி அதர்வணஸீர்ஷ உபநிஷ பாராயணம் மற்றும் மகா கணபதி பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு விநாயகர் வந்தனம் என்ற தலைப்பில் சின்மயா யுவகேந்திரா உறுப்பினர்கள் பஜனை நடத்துகிறார்கள். இந்நிகழ்ச்சிகளை மதுரை சின்மயா மிஷன் யூ டியூப் தளத்தில் நேரடியாக பார்க்கலாம்.