உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகருக்கு மலர் தூவிய அம்மு!

விநாயகருக்கு மலர் தூவிய அம்மு!


திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில், விநாயகர் சதுர்த்தி விழாவில், செல்லமாக வளர்க்கும் கிளியும், மலர்துாவி அர்ச்சனை செய்தது, பரவசத்தை ஏற்படுத்தியது.

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா; எவரெஸ்ட் ரோட்டரி கிளப்பின் ஆலோசகராக உள்ளார். இவரது மகள், சாய்ஸ்ரீ, 7ம் வகுப்பு படிக்கிறார். தன் வீட்டில் வளரும் அம்மு என்ற கிளிக்கு, பேசவும், பாடவும் பயிற்சி வழங்கியிருக்கிறார்.அவரது குடும்பத்தினர், நேற்று முன்தினம், விநாயகர் சிலையை அலங்கரித்து, வீட்டில், சதுர்த்தி விழா கொண்டாடினர். அவர்கள், மலர்துாவி விநாயகரை வழிபாடு செய்ததை பார்த்த கிளி, தானும் பூவை எடுத்துச்சென்று, விநாயகருக்கு அர்ச்சனை செய்துள்ளது; இதைக்கண்ட குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் உறைந்தனர்.சாய்ஸ்ரீ கூறுகையில், வீட்டின் முன், நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து, சிகிச்சையளித்து குணப்படுத்தினோம். அதன்பின், கிளி வெளியே சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று, நாங்கள் வழிபடுவதை பார்த்து, அம்முவும் பூவை எடுத்து விநாயகர் மீது வைத்து அர்ச்சனை செய்தது ஆச்சரியமாக இருந்தது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !