உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்தர் கோவிலில் உழவாரப்பணி

சித்தானந்தர் கோவிலில் உழவாரப்பணி

புதுச்சேரி : தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஆலயங்களை பாதுகாக்கவும், சிதிலமடைந்த கோவில்களை சரி செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு சார்பில் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் உழவாரப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதன்படி பிள்ளைத்தோட்டம் ஆனந்த முத்துமாரியம்மன் கோவில், வெள்ளந்தாங்கி அய்யனார் கோவில், சின்னக்கடை எல்லையம்மன் கோவில், வாழைக்குளம் செங்கழுநீரம்மன் கோவில்களில் இதுவரை உழவாரப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டன. கோவில் வளாகம் முழுவதும் துாய்மைப் படுத்தப்பட்டது. தொடர்ந்து நந்தவனத்தில் மூலிகை செடிகள் நடப்பட்டன. தொடர்ந்து அன்னதானம், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், திருநங்கைகள், தொகுதி நிர்வாகிகள், சிவனடியார்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !