உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாமே பாவத்தொழில்

வேண்டாமே பாவத்தொழில்


ஒருமுறை  வானுலகம் சென்ற போது சிலர் கூட்டமாக கூடி நிற்பதைக் கண்டார் நாயகம். அவர்களது வயிறு கண்ணாடி போல காட்சியளித்தது. அதற்குள் ஏராளமான பாம்புகள் வளைந்தபடி இருந்தன. அங்கிருந்த வான துாதரிடம்  காரணம் கேட்டார்.
“ பிறரிடம் வட்டி வாங்கும் பாவத்தொழில் நடத்தியவர்கள் இவர்கள்” என பதில் கிடைத்தது.
 கிடைத்த வட்டி பணத்தில் பூமியில் வேண்டுமானால் சுக வாழ்வு வாழலாம். ஆனால் இறந்த பிறகு, வட்டி கட்டியவரின் வயிற்றெரிச்சல் பாம்புகளாய் மாறி வயிற்றில் குடியேறும் என்பதை மறக்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !