வீர ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திர சிறப்பு யாகம்
ADDED :1874 days ago
சிறுமுகை : சிறுமுகை அருகே உள்ள ரங்கம்பாளையம், நாராயண புரி ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் ஆவணிமாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நலனிற்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் யோகலட்சுமி சமேத லக்ஷ்மி நரசிம்மர் அருள்பாலித்தார். கொரோனா தடை உத்தரவால் பக்தர்கள் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.