சிரவண மங்களா
ADDED :2153 days ago
காஸ்யபர், அதிதி தம்பதிக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பிள்ளைகளாக இருந்தனர். இத்தம்பதி மகாவிஷ்ணுவை பிள்ளையாக அடைய விரும்பி தவமிருந்தனர். அதை ஏற்ற மகாவிஷ்ணு, ஆவணி மாதம் வளர்பிறை துவாதசியும், திருவோணமும் சேரும் நாளில் வாமனராக அவதரித்தார். வாமனரைக் கண்ட அதிதி, ‘சிரவண மங்களா’ (ஓண நாளில் மங்களமாக வந்தவனே) என்று சொல்லி மகிழ்ந்தாள். இந்திரனின் தாய் வயிற்றில் பிறந்ததால், வாமனருக்கு ‘உபேந்திரன்’ என பெயருண்டு. இதற்கு ‘இந்திரனுக்கு பின் வந்தவன்’ அதாவது ‘இந்திரனின் தம்பி’ என்பது பொருள்.