பெரியகாண்டியம்மன் கோவில் குடமுழுக்கு
ADDED :1878 days ago
சேந்தமங்கலம்: பெருமாபாளையம் பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. சேந்தமங்கலம் தாலுகா, பெருமாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியகாண்டியம்மன் கோவில் மஹா கும்பாபி ஷேக விழா நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. அன்று இரவு முதல் கால வேள்வியும், நேற்று காலை இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, சிவாச்சாரி யார்கள் யாகசாலையில் இருந்து புனித தீர்த்தம் நிரம்பிய கலசங்களால் ஊர்வலமாக எடுத்து சென்று, 7:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியில் நின்று கோபுர தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.