சுரக்குடி பெருமாள் கோவில் பாலாலயம்; அமைச்சர் பங்கேற்பு
ADDED :1970 days ago
காரைக்கால் : சுரக்குடி ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது. திருநள்ளாறு அடுத்த சுரக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் பகவத் அனுக்ஞை.ரக்ஷாபந்தனம் ஹோமங் கள் பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. பின்னர் நேற்று காலை கோ.பூஜை புண்யாஹம் காலசந்தி பூஜை, அக்னி ஆராதனை, ஹோமங்கள், பூர்ணாஹீதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு மற்றும் மூலஸ்தான பாலாலய ப்ரதிஷ்டை மந்த்ரபுஹ்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.