திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் ரத்து
ADDED :1878 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தடை உத்தரவால் ஐந்து மாதங்களாக கிரிவலம் ரத்து செய்யப்பட்டது. இன்று (செப்., 1)முதல் கோயில்களை திறக்க அரசு உத்தரவிட்டாலும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள்கூட்டத்தை தவிர்க்க அரசு வழிகாட்டுதலின்படி கிரிவலம் ரத்து செய்யப்படுகிறது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.