சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்
ADDED :10 hours ago
சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால், தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஒவ்வொறு ஆண்டும், குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாவின்போது, பொது தீட்சிதர்கள் கீழவீதி கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி, குடியரசு தின விழாவையொட்டி பொது தீட்சிதர்கள் செயலர் சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாள தட்டில்,தேசியக்கொடி வைக்கப்பட்டு, சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.பின்னர், மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று, 152 அடி உயரமுள்ள, கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.