அவிநாசி கோவிலில் ரத சப்தமி விழா
ADDED :19 minutes ago
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ சந்திரசேகரப் பெருமான் ஆகியோர் சூரிய பெருமானுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. கோவிலில் இருந்து, இளம் காலை கதிரவனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும்; பட்டி சுற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.