திண்டுக்கல்லில் ஓணம் பண்டிகை
ADDED :1880 days ago
திண்டுக்கல்,திண்டுக்கல்லில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் நேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.திண்டுக்கல், பழநி, சின்னாளப்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள் புத்தாடை அணிந்து, வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்தும், காய்கறி படையல் வைத்தும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
சின்னாளபட்டி: மூலவருக்கு தங்கக்கவச அலங்காரமும், உற்ஸவர் கோதண்டராமருக்கு உலகளந்த பெருமாள் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபா தாரதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், ஓணம் பண்டிகை சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.