ஊரடங்கிற்கு பின் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
ADDED :1886 days ago
திட்டக்குடி: கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட கோவில்கள், ஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திட்டக்குடி வதிஷ்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில், நேற்று காலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி பயன்படுத்தி வழிபாட்டிற்கு அனுமதிக்கப் பட்டனர். வைணவ செம்மல் வரத சிங்காச்சாரியார் சுவாமிகள் பூஜைகளை செய்து வைத்தார். கோவில் பட்டாச்சாரியார் ராகவன் உடனிருந்தார். இதேபோல் திட்டக்குடி, தொழுதூர் பகுதிகளில் ஐந்து மாதங்களுக்கு பின் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.