உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்த்தி விரதம், வர சதுர்த்தி: விநாயகரை வழிபட எதிலும் வெற்றி தான்!

சதுர்த்தி விரதம், வர சதுர்த்தி: விநாயகரை வழிபட எதிலும் வெற்றி தான்!

இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். விநாயகப் பெருமானின் அருளை பெற மிக சிறந்த நாள் இன்று. விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி தினம். தை சதுர்த்தியில் விநாயகரை வழிபட செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். ர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர் இவர். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு, அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். விநாயகரை வழிபட இன்று விஷ்ணுவின் அருளும் சேர்ந்து கிடைக்கும். இன்று விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் வளம் சேர்ப்போம்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !