பிராணிகளை நேசிப்போம்
ADDED :2022 days ago
இளைஞர் ஒருவரின் தோட்டத்தில் நுழைந்த நாயகம் அங்கு ஒட்டகம் வேதனையால் கண்ணீருடன் நிற்க கண்டார். அதன் தலையிலும் நெற்றியிலும் தடவிக் கொடுக்க, அது அமைதியடைந்தது. ‘‘இந்த ஒட்டகம் யாருடையது?’’ என கேட்டார்.
‘‘ என்னுடையது’’ என்றான் இளைஞன்.
‘‘உம் அதிகாரத்தின் கீழிருக்கும் வாயில்லாப் பிராணி மீது இரக்கமில்லையா? கண்ணீர் சிந்துவதை பார். இனியாவது வயிறார உணவு கொடு’’ என்றார்.
‘‘ செழிப்பான காலத்தில் ஒட்டகத்தின் மீது பயணம் செய்பவர்கள் அவற்றுக்கான உணவை பூமியில் இருந்து கொடுங்கள். பஞ்ச காலத்தில் பயணம் செய்தால் அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள்.’’ என்றார்.
மழை காலத்தில் புல் பூண்டுகள் முளைத்திருக்கும். அப்போது மேய வாய்ப்பு கிடைக்கும். வறட்சி காலத்தில் தங்குமிடத்தை அடைந்த பின்னரே அதன் பசி, தாகத்தை போக்க முடியும்.