கோவில்பட்டி வளனார் தேவாலய திருவிழா
கோவில்பட்டி : கோவில்பட்டி வளனார் தேவாலயத்தில் பத்துநாள் திருவிழா கோலாகலமாக நடந்தது. கோவில்பட்டி தூய வளனார் தேவாலய வருடாந்திர பத்துநாள் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து நடந்த திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியை கோவில்பட்டி தூய வளனார் ஆலய பங்குத்தந்தை அன்னாசாமி அடிகளார், பாளை மறைமாவட்ட புதிய குருக்கள் வினோத்ஜெகன், வில்சன், ஜோவர்க்கீஸ் ஆகியோர் குழந்தைகளின் வரவேற்பில் வந்து திருப்பலி வழிபாடுகளை நடத்தினர். மேலும் ஜோசப்ராஜ் அடிகளார் கலந்து கொண்டு திருவிழா திருப்பலியில் பைபிள் குறித்து பேசினார். தொடர்ந்து மாலையில் நடந்த நற்கருணை பவனியில் சுமார் 51 குழந்தைகள் புதுநன்மை பெற்றனர். இதையடுத்து திருமணமாகி 25 வருடம் நிறைவு செய்த தம்பதிகளுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. நிறைவாக கொடியிறக்க வழிபாடுகள் நடந்தது.