மக்கள் வழிபடும் நடுகல் : வரலாற்று அடையாளம்
மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா உரம்பூர் விளை நிலங்களுக்கு மத்தியிலுள்ள நடுகல் குறி த்து ஆய்வு செய்தால் வரலாற்று தகவல் கள் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
.திருப்பூர்மாவட்டஎல்லை, மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட உரம்பூர் கிராமத் தின் விளை நிலங்களுக்குமத்தியில், ஒரு நடுகல் உள்ளது. நான்கடி உயரம், இரண்ட ரை அடி அகலம் உள்ள இந்தகல் முழுவது ம் 20க்கும் மேற்பட்ட குங்குமப் பொட்டிட்டு வணங்கப்படுகிறது. இதுகுறித்து இந்தப் பகுதியில் உள்ள மக்கள் கூறியதாவது: " பல தலைமுறையாக இந்த கல் உள்ளது இங்குள்ளவர்கள் வெள்ளிக்கிழமை வழி படுகின்றனர். இதன்அமைப்பு. காலகட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை ஆய்வு செய்தால் பல வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்பு ள்ளது" எனக் கூறினர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது : " உளிகளால் செதுக்கி, சீராக்கி நடப்பட்ட கற்கள் 5 முதல் ஆறு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாகும். உளிகளால் செதுக்க ப்படாத சீரற்ற நடுகற்கள் ஆயிரம் ஆண்டு கள் கடந்தவையாக இருக்கும். இந்த நடு கல் சீராக அமைக்கப்பட்டுள்ளதால், 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலா ம். ஆனைமலை முதல் கரூர் வரை பெரு வழி இருந்த காலகட்டத்தில் இந்த வழித் தடத்தில் ஏற்பட்ட போர் அல்லது எதிர்பா ராத மோதல்ளால் முக்கியமான ஒரு வீரர், குறுநில மன்னர், சிற்றரசர் அல்லது பாளையக்காரர் மரணம் அடைந்திருக் கலாம்.அவரை அடக்கம் செய்த இடத்தில், நடுகல் அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.