உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி அலங்காரத்தில் பைரவர்

தேய்பிறை அஷ்டமி அலங்காரத்தில் பைரவர்

திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷ்ண பைரவரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. ஊரடங்கு தளர்வுக்குப் பின் முதல் தேய்பிறை அஷ்டமிஎன்பதால் திரளான பக்தர்கள் வந்தனர்.கொரோனா முன் எச்சரிக்கையாக பக்தர்கள் கொண்டு வந்த பால், பூக்களால் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் செய்வதை தவிர்த்தனர். நேற்று வழக்கம் போல் கோயிலில் இருந்தே அபிேஷகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உணவுப் பொட்டலத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !