உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளப்பாளையம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

கள்ளப்பாளையம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

சூலூர்: கள்ளப்பாளையம் பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி உறியடி உற்சவம் நடந்தது. சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. ஹோமம், அபிஷேக, அலங்கார பூஜைகள் முடிந்து, பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து, வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகளில், சிறுவர், சிறுமியர் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கோவில் கமிட்டியினர், பிரசாதம் மற்றும் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !