கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி
கம்பம், : கம்பம் நவநீத கிருஷ்ணன் யாதவர் பொதுமடாலயம் வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் சுவாமியை தரிசித்தனர். கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். முன்னதாக கம்பராயப் பெருமாள் கோயிலில் யாதவர் சமுதாயம் சார்பில் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.* கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு, நந்தகோபாலன் கோயிலில் பசுக்களை மட்டுமே தெய்வமாக வழிபடுகின்றனர். பட்டத்துக்காளைக்கும் அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒக்கலிக சமுதாய நிர்வாகிகள், பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. கருவறையில் ஸ்துாபத்திற்கு பாலாபிேஷகம், சிறப்புபூஜை உள்ளிட் டவை நடந்தது. கொரோனா காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.* மூணாறு- இங்குள்ள காளியம்மன் கிருஷ்ணர் நவகிரக கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சிறுவர்,சிறுமியர் கண்ணன்,ராதை வேடமிட்டு வந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மனோஜ் செய்தார்.