வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா
ADDED :2214 days ago
மயிலம்; மயிலம் அடுத்த பேரணி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடந்தது.அதனையொட்டி சாமிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த மகா தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலா நடந்தது. கோவில் அருகே உள்ள மைதானத்தில் உறியடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் உறியடித்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.