முத்துமாரியம்மன் கோவில் பால் குடம் ஊர்வலம்
ADDED :1882 days ago
ரிஷிவந்தியம்; சூ.பாலப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த சூ.பாலப்பட்டில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதையொட்டி கடந்த 11ம் தேதி சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் சக்தி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மன், அய்யனார் சாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. 11:00 மணியளவில், 101 பேர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 150க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். இரவு சாமி வீதியுலா நடந்தது.