பொதட்டூரில் ஜாத்திரை திருவிழா
ADDED :1890 days ago
ஆர்.கே.பேட்டை, : ஆவணி மாதம் கடைசி தேதியில், அம்மனுக்கு நடுத்தெரு கும்பம் படைக்கப்பட உள்ளது. அதற்கான ஆரம்ப பூஜை, நேற்று ஆரட்டம்மன் கோவிலில் நடந்தது.
ஆவணி மாதம், நான்காம் வாரம் அம்மனுக்கு ஜாத்திரை நடத்தப்படுவது, ஆர்.கே. பேட்டை சுற்றுப் பகுதியில் வழக்கம்.ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனுார் உள்ளிட்ட கிராமங்களில், நான்காம் வாரமான, கடந்த செவ்வாய்க்கிழமை கும்ப திருவிழா நடந்து நிறைவடைந்த நிலையில், பொதட்டூர்பேட்டையில் மட்டும் ஆவணி கடைசி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் புதன் கிழமை, ஆவணி மாதம் நிறைவடைகிறது. அதையொட்டி, அன்று மதியம், நடுத்தெருவில் எழுந்தருளும் அம்மனுக்கு கும்பம் படைக்கப்பட உள்ளது. இதற்கான துவக்க பூஜை, நேற்று ஆரட்டம்மன் கோவிலில் நடைபெற்றது. திரளான பெண்கள், ஆரட்டம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.