உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி மலையை சுற்றுலா தலமாக்க ஆய்வு

சங்ககிரி மலையை சுற்றுலா தலமாக்க ஆய்வு

சங்ககிரி: சங்ககிரி மலையை சுற்றுலா தலமாக்க, சேலம் மாவட்ட சுற்றுலா துறை, சர்வே குழுவினர் ஆய்வு செய்தனர். சங்ககிரி மலைக்கோட்டையில், வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்கள் அதிகளவில் உள்ளன. இதனால், சுற்றுலா தலமாக்க, மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன் அறிவுறுத்தல்படி, சுற்றுலாத்துறை, சர்வே குழுவினர், நேற்று முன்தினம், சங்ககிரி மலையில் ஆய்வு செய்தனர். அவர்கள், அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்லும் பாதை, மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவை, அடிவாரத்தில் ஓய்வு எடுக்க இருக்கை அமைப்பது, வெளிமாநிலத்தவர் வந்தால் தங்க விடுதி, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், கணினி, பாதுகாப்பு வசதி குறித்து ஆலோசித்தனர். இதன் திட்ட அறிக்கை, சேலம் கலெக்டர் ராமன் மூலம், அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என, குழுவினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !