கரபுரநாதர் கோவிலில் நாளை தர்ப்பணம் ரத்து
ADDED :1943 days ago
வீரபாண்டி: மகாளய அமாவாசையை முன்னிட்டு, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள், முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் கொடுப்பர். நடப்பாண்டு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், கூட்டம் சேருவதை தடுக்க, மகாளய அமாவாசையான நாளை, தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி ரத்து என, கரபுரநாதர் கோவிலில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.