மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED :1847 days ago
மகாளய அமாவாசையான இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மகாளய அமாவாசையையொட்டி, பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில், வெள்ளி கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜோதிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில், பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் தனது முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர். உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.