திருப்பரங்குன்றம் கோயிலில் தீர்த்த உற்ஸவம்
ADDED :1957 days ago
திருப்பரங்குன்றம், மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அஸ்தர தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறப்பு பூஜைகள் முடிந்து அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.மலைக்குப்பின்புறம் எழுந்தருளியுள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்து சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.