பழநியில் புரட்டாசி பிறப்பு வழிபாடு
ADDED :2129 days ago
பழநி : பழநி மலைக்கோயிலில் புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்த விநாயகருக்கு கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு புனித கலசநீரில் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. இதேப்போல திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பெரியாவுடையார் கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது.