மகாளய அமாவாசை வெறிச்சோடிய நவபாஷாணம்
ADDED :1961 days ago
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களிலும், மகாளய அமாவாசை தினங்களிலும், முன்னேர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். கொரோனா ஊரடங்கால் நவபாஷாண கடலில் புனித நீராட தடை நீடிப்பதால், கோவில் பூட்டப்பட்டுள்ளது. நேற்று மகாளய அமாவாசை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், கோவில் பூட்டப்பட்டதால் நவபாஷாண கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு வந்த பக்தர்களை, போலீசார் திருப்பி அனுப்பினர். அமாவாசை தினத்தில் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாததால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.