நவசக்தி வாராகி அம்மன் மந்த்ராலயம் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1885 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் ஸ்ரீ வாராகி மந்த்ராலயம் கோவிலில் மகாளாய அமாவாசையை ஒட்டி நவசக்தி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.