உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்: திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் (செப்.19) புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்ஸவத்தை முன்னிட்டு அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர்.


இன்று முதல் ஐந்து சனிக்கிழமைகளில் காலை 3:30 மணி முதல் இரவு 7:30 மணிவரை 30 நிமிடத்திற்கு ஒரு குழுவாக பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக www.tnhrce.gov.inல் கட்டணம், கட்டணமில்லா தரிசனத்திற்கு முன்பதிவு செய்யவேண்டும்.10 வயதிற்குட்டபட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள். பக்தர்கள் சொந்த வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லாததால் கோவில்பட்டி, அருப்புகோட்டை, ராஜபாளையம், சிவகாசி, சாத்துார், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !