கந்தசாமி தேசிகர் சித்தர் கோவிலில் குருபூஜை
ADDED :1843 days ago
புதுச்சேரி; நெட்டப்பாக்கம் கந்தசாமி தேசிகர் சித்தர் கோவிலில் குருபூஜை மற்றும் சங்கு அபிேஷக விழா நடந்தது.அதனையொட்டி, கடந்த 16ம் தேதி மாலை செந்தமிழ் திருவேள்வி வழிபாடு நடந்தது. மாலை 5.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இரவு 7.00 மணிக்கு பேரொளி வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சமூக இடைவௌியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.