கோவில் கும்பாபிஷேக 2ம் ஆண்டு நிறைவு விழா
ADDED :1844 days ago
காரிமங்கலம்: கன்னிப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக, இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. காரிமங்கலம் அடுத்த கன்னிப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், யூனியன் சேர்மன் சாந்தி பெரியண்ணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், விழா குழுத்தலைவர் வெங்கட்ராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.