நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2006 days ago
வேப்பூர்: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிப்பட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, வேப்பூர் அடுத்த நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை திருமஞ்சன அபிஷேகம் செய்து, அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர், தீபாராதனை நடந்ததில், சுற்றுப்புற கிராம பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.