மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி விழா
ADDED :1891 days ago
மதுரை: மதுரை, கூடல் அழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழாவில் சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை, மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, கூடல் அழகர் பெருமாள் கோவிலாகும். இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். புரட்டாசி மாதத்தை ஒட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்படி புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி உடன் பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்/நிர்வாக அதிகாரி ராமசாமி செய்திருந்தார்.