உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பிரம்மோற்ஸவம் துவக்கம்

ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பிரம்மோற்ஸவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 10:30 மணிக்கு கொடிபட்டம் கோயில் பிரகாரம் சுற்றி கொண்டு வரப்பட்டது. சிறப்பு பூஜைகள், வேத கோஷங்கள் முழங்க வாசுதேவபட்டர் கொடி ஏற்றினார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். அலங்காரத்தில் எழுந்தருளிய பூமாதேவி, ஸ்ரீதேவி மற்றும் வடபத்ரசயனரை பக்தர்கள் தரிசித்தனர். 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினமும் வடபத்ரசயனர், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கொரோனாவால் சுவாமிகள் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !