புரட்டாசி சனி சிறப்பு பூஜை: பக்கதர்கள் பரவசம்
ADDED :1890 days ago
கருமத்தம்பட்டி: புரட்டாசி மாத முதல் சனிக் கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊரடங்கால் பக்கதர்கள் தரிசனத்துக்கு இரு மாதங்களாக, தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரத்தில் இருந்து கோவில்களில் வழிபட அரசு அனுமதியளித்தது. நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால், சூலூர் பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி கரிய மாணிக்க பெருமாள் கோவில், அப்பநாயக்கன்பட்டி, காங்கயம் பாளையம், கள்ளப்பாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரபூஜைகள் நடந்தன.பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.