உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: பக்தர்கள் தரிசனம்

நாமக்கல்: புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஊரடங்கால் கடந்த, ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவில், கடந்த, 1ல் திறக்கப்பட்டது. நேற்று, முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளாக வந்தனர். சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !