சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் குழுமை சாட்டுதல் விழா
ADDED :8 hours ago
ஆண்டிபட்டி; சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழாவிற்கான குழுமை சாட்டுதல் விழா நடந்தது. ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும். இந்த ஆண்டு விழாவிற்கான குழுமை சாட்டுதல் நிகழ்ச்சி கோயில் செயல் அலுவலர் சுந்தரி, தக்கார் சுதா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டன. சித்திரை திருவிழாவிற்காக ஏப்ரல் 21ல் யாகம் வளர்த்து கொடியேற்றவும், ஏப்ரல் 28, 29, 30, மே 1 தேதிகளில் விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.