உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீணாதாரியாக ஹம்சவாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி

வீணாதாரியாக ஹம்சவாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி

திருப்பதி : திருமலை திருப்பதி பிரம்மோற்சவ இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு வெண்பட்டு உடுத்தி வீணை ஏந்திய சரஸ்வதி அலங்காரத்தில்  ஹம்ச வாகனம் எனப்படும் அன்ன வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் நடந்த இந்த வைபவத்தில் கோவிலின் முக்கிய அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். இதே போல காலையில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். இன்றைய சிறப்பம்சமாகவும்  பிரம்மோற்சவத்தின் ஒரு நிகழ்வாகவும்  பெருமாளை புனித நீரால் நீராட்டும் ஸ்நப்ன திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இளநீர், தயிர், பால், மஞ்சள், சந்தனம் போன்றவைகளால் நீராட்டல் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !