திருப்பதி பிரம்மோற்சவம் 3ம் நாள்: முத்துப்பந்தல் அலங்காரத்தில் சுவாமி
ADDED :1847 days ago
திருப்பதி: திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று இரவு 9 மணிக்கு மலையப்பசாமி முத்து பந்தல் அலங்காரத்தில், காளிங்கன் எனும் பாம்பின் மீது நடனமாடும் அலங்காரத்தில் தேவியர் சமேதரராய் எழுந்தருளினார்.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி கோவிலுக்குள் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார் மாலையில் அவருக்கு ஸ்நப்ன திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு முத்துபந்தல் அலங்கராத்தில் வந்தருளினார். முழுக்க முழுக்க முத்துக்களால் பந்தல் அலங்கரிக்கப்பட்டு இருந்துது பந்தலினுள் இருந்த சுவாமியின் ஆபரணங்கள் கூட முத்துக்களால் அமைந்திருந்தது. அலங்கார பிரியரான வேங்கடேஸ்வர பெருமாளை முத்துக்களால் அலங்கரித்து மகிழ்ந்தனர்.