மணவிருந்து ஏற்ற மாலோலன்
ADDED :1855 days ago
திருப்பதி ஏழுமலை ஸ்ரீநிவாசனுக்கும், அலமேலு மங்கைக்கும் திருமணம் நடந்தது. அதில் பங்கேற்க வந்த பிரம்மா, ‘‘ ஏழுமலையானே! விருந்துக்காக உணவு வகைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மகரிஷிகள், மகான்களெல்லாம் பசியோடு காத்திருக்கிறார்கள். இதை நிவேதனம் செய்து விட்டால் விருந்தினர்களுக்கு பரிமாறலாம். உணவை யாருக்கு நிவேதனம் செய்வது?” என்று கேட்டார். மகாவிஷ்ணுவே பூலோகத்தில் சீனிவாசனாக அவதாரம் எடுத்து வந்திருந்தாலும், மனிதனாக அவர் இருப்பதால் முதலில் கடவுளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பிரம்மா இப்படி கேட்டார். உடனே சீனிவாரும் அகோபிலத்திலுள்ள மாலோல நரசிம்மனுக்கு நிவேதனம் செய்யும்படி கூறினார். அவ்வாறே செய்யப்பட்டு விருந்தினர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.